நம் உணவுப் பழக்கம் சரிதானா?


மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான். இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிக சமீப காலத்தில் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.

உளவியல் ரீதியாகவும் நாகரீகத்திலும்,தொழில் நுட்பத்திலும் குறுகிய காலத்தில் நாம் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்தாலும் அவ்வளவு வேகத்தில் மாறிய உணவுப்பழக்கத்திற்கேற்ப நம் பிஸியாலஜியோ அதை நிர்ணயிக்கும் மரபணுக்களோ மாறவில்லை என்பதே உண்மை. தற்கால உணவுப் பழக்கத்தால் உடலில் அதிகப்படியாக சேரும் மாவு சத்தை எப்படிக் கையாள்வது என உடலின் பழமையான ஜீரண நிர்வாகம் திணறுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த சத்தான உணவுகளை மண்ணிலிருந்து நேரடியாக உண்டார்கள். ஆனால் இன்று நாம் உண்பது 90% உணவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தியது. அரிசி கூட அதன் நல்ல சத்துகள் நிறைந்த தோல் தீட்டப்பட்டே கிடைக்கிறது.தொழில் நுட்ப சாத்தியமும் வியாபாரக் கண்னோட்டமுமே நமது தற்போதைய உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கிறது. எது உடலுக்கு தேவையான உணவு என்பதை விடுத்து எது சுவையானது என்று பார்த்து அதை மட்டுமே பெருமளவு உற்பத்தி செய்தும் உண்டு வருகிறோம். சுவையான எல்லாப் பொருட்களிலும் கொழுப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது. இன்று சூப்பர் மார்கட்டில் கிடைக்கும் எந்த பொருளுமே அதிக கலோரி தரும் மாவு, கொழுப்பு, இனிப்பு பொருட்களாகவே நிறைந்து கிடக்கிறது. அனேக உணவுப்பொருட்களுக்கு பால் ,கோதுமை அடிப்படை பொருளாக இருக்கிறது. நம் உடல் தேவைக்கும் அதிகமாக மாவுசத்தை உள்ளே தள்ளுகிறோம். போதாக்குறைக்கு வெறும் கலோரி மட்டுமே தரக்கூடிய சர்க்கரையை வித விதமான வடிவத்தில் விழுங்குகிறோம்.

USDA Food pyramid பரிந்துரைக்கும் தினமும் 6-11servings மாவுப்பொருள் உணவுத்திட்டம் கூட தவறானது.இது நம் தேவைக்குமிகவும் அதிகமானது. அதிகப்படியான மாவுசத்து, இனிப்பு சத்து திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்கரை நோயாளியாக்கி விடுகிறது. அதிக சர்கரை ரத்த வெள்ளையணுக்களை பாதிக்கிறது.இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் தொற்று நோய்களால் தாக்கப்படுகிறோம்.

இரத்தத்தில் திடீரென மாவு சத்தும், இனிப்பு சத்தும் அதிகரிக்கும் போது பாங்க்ரியாஸ் இ ரத்தத்தில் இன்சுலினை சுரந்து அதிகப்படியான இனிப்பை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. பின்னொரு சமயம் மனிதன் பட்டினி கிடக்க நேர்ந்தால் சேமிக்கப்பட்ட இந்த கொழுப்பு மீண்டும் சக்தியாக மாற்றப்படும்.இது பல்லயிரம் ஆண்டுகளாக மனிதனின் உணவுப்பகக்கத்தை ஒட்டி உடலில் பரிணாமம் பெற்ற ஒரு பாது காப்பு அமைப்பு. ஆனால் இன்றைய நிலை வேறு. இல்லாதவனுக்கு சேமிப்பதற்கு எந்த உணவும் இல்லை. இருப்பவனுக்கு உணவுக்கு பஞ்சமும் இல்லை. எல்லா உணவும் அவனுக்கு கொழுப்பு உணவாகிப்போனால் எவ்வளவுதான் உடல் சேமிக்கும். அது எப்போது செலவளியும்.

நாகரீக மனிதன் உடல் இயக்கத்தை தொழில் நுட்பதால் குறைத்துக் கொண்டான். ரிமோட் கண்ட்ரோலில் எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்து இயக்கலாம். உட்கார்ந்தே வேலை பார்க்கும் அலுவலகங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், கை பேசிகள், இணையம் என எவ்வளவோ முடியுமோ அவ்வளவு தசைகளுக்கு வேலை குறைந்து விட்டது. சாப்பிடும் போது கூட உணவை மென்று கஷ்டபடக்கூடாது என்று வேக வைத்து சாப்பிட்டு பார்த்தான் . இப்போதெல்லாம் அநேக உணவுகள் மென்மையாக , ப்ரெட், ஐஸ்க்ரீம் , பிட்ஸா என்று வாய்க்கு கூட வேலை வைப்பதில்லை. இதன் விளைவு உடல் பருமன், மூட்டுவலி, கொலஸ்ட்ரால், சர்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம் ,டென்சன்.......
மாமிசம் மற்றும் இயற்கையான தாவர உணவை குறைத்து வெறும் மாவு சத்து மட்டும் நிறைந்த தானிய உணவு பெருமளவு உட்கொள்ளத்தொடங்கிய பின் சராசரி மனித ஆயுள் குறைந்து விட்டது. சிசுமரணம், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் தொற்று நோய்களால் பாதிக்கபடுவது அதிகரித்து விட்டது.

ட்யூக் யுனிவர்சிடியின் ஆராய்ச்சிக் குறிப்புகளில் ஒன்று அதிகமான மாவு சத்து உண்பது புற்று நோயை ஊக்குவிப்பதாக தெரிவிக்கிறது.

தேவைக்கு மட்டும் உண்பதும் அதிகமான கொழுப்பை வேலை செய்தும் நோன்பிருந்து குறைத்தும் சமநிலையில் வைக்கவேண்டும். முடிந்த அளவு இயற்கையான உரத்தில் விளைந்த இயற்கையான தாவர உணவுகளை ஃப்ரெஸ்ஷாக உண்ணவும். மாமிச உணவும் உடலுக்கு இயைந்ததே, தேவையானதும் கூட. மாவு,கொழுப்பு சர்க்கரை சத்துகள் தேவைக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். தேவையான உப்பு நாம் உண்ணும் உணவிலேயே கிடைப்பதால் உப்பு தனியாக தேவையில்லை.

அனேக சுவை உணவுகளில் பால் சேருகிறது. பசுவின் பால் அதன் கன்றுக்குட்டியின் தேவைக்காக இயற்கை அளித்தது. பசு புல் தானே தின்னுகிறது. மனிதன் மட்டும் அதன் பாலை அளவுக்கு அதிகம் உணவில் பயன்படுத்துவது மனித உடல் தேவைக்கு மாறானது. ரத்தத்தில் கொழுப்பு சத்தை அதிகரிக்கச்செய்கிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர உணவுகளை உண்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்பதை உடனே அறிய முடியாது. பிற்காலங்களில் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டி வரலாம்.

ரசாயனகூடங்களில் இருக்க வேண்டிய எவ்வளவோ பொருட்கள் இன்று உணவு மேஜைக்கு வந்து விட்டது. உணவு உற்பத்தி என்பது விவசாயிகள் கையை விட்டுப் போய் விஞ்ஞானிகள் கைக்கும் அதை இயக்கும் பெரும் வியாபார நிறுவனங்களின் தந்திர மூளைக்கும் போய்விட்டது. வியாபாரப் போட்டியில் இருக்கும் இவர்களுக்கு வருங்கால மக்கள் நலனை பற்றியா கவலை? மரத்திலிருந்து பறித்து உண்ணும் மாம்பழத்தை விட ரசாயனங்களால் செய்த மாம்பழச்சாறு போன்ற திரவத்தை சிறந்ததாக மக்களிடம் பரிந்துரைக்கிறார்கள். ஒரு பழத்தில் இருக்கும் இயற்கையான ரசாயனப் பொருளுக்கும் ,குழந்தை உணவுகளில் அதிகமாக சேர்க்கும் செயற்கையான ரசாயன தாதுக்களுக்கும் வேறுபாடு உண்டு. குழந்தைகளை குறி வைத்து எவ்வளவு போலி சத்துணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மருந்துகள் என்ற பெயரில் எவ்வளவோ பொருட்கள் உணவுக்கு சமமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பின் விளைவுகள் முழுதும் தெரிந்து தான் பயன் படுத்துகிறார்களா?

பரிணாமத்தின் பல்வேறு கால கட்டங்களில் திடீரென உண்டாகும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தான் டைனோசர் போன்ற பல்வேறு உயிரினங்கள் பழங்கதைகளாகிப் போயின. இன்றைய காலங்களில் ஏற்படும் வேகமான மாற்றங்கள் , இயற்கையை விட்டு நீங்கிய உணவுப்பழக்கம் மனித வரலாற்றை அழித்து விடக்கூடாது.

சர்க்கரையை பற்றிய கசப்பான உண்மைகள் கானொளியில்
 



கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை.

நல்ல தகவல்கள்.

இந்த வலையை இன்னும் மக்களுக்கு எடுத்து செல்லனும் ...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஜமால். எப்படி இருக்கீங்க.இந்த பதிவிற்கு உங்கள் தளத்தில் இணைப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி
ரோஸ்விக் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமையான, வாழ்விற்குத் தேவையான கட்டுரை நண்பரே.
பகிர்விற்கு நன்றிகள். தொடருங்கள்.
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
நலமாய் இருக்கின்றோம் சாதிக்

அங்கும் அப்படியே இருக்க எமது துவாக்கள்.

நன்றி தங்களுக்கே.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
ஸ்கிம்/மில்க்
மக்கா சோளம்
சர்க்கரை
கார்ன்பிளாக்ஸ்
கோக்/பெப்ஸி போன்ற குளிர் பானங்கள்
அதிக அளவில் காபி
சூயிங் கம்
ஐஸ்க்ரீம்
சாக்லட்
ஓட்மீல்
சோயாபீன் ஆயில்,
கார்ன் ஆயில்
ஹைட்ரஜேனட்டட் ஆயில்
மார்கரின்
வெஜிட்டபிள் ஆயில்
சூரியகாந்தி ஆயில்
கேனாலா ஆயில்
கர்டி ஆயில்
சுத்திகரிக்கப்பட்ட எண்னெய்கள்
கொலஸ்டிரால் ப்ரீ,ஃபேட் ப்ரி உணவுகள்
துரித உணவுகள்
பேக்கரி பொருள்கள்
ஜங்க் ஃபுட்ஸ் என்று சொல்லப்படுகிற மெகி, நூடுல்ஸ்,மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ்,கேஎப்சி சிக்கன், குளிர்பானங்கள்
சோயா, டோபு , எடமாமி
கடைகளில் விற்கும் புராசஸ்டு ஜூஸ் வகைகள்
ட்ராபிகானா மாதிரி கமர்ஷியல் ஜூஸ்
பழச்சாறு (juice) (பழமா சாப்பிடுங்கள்)
கொழுப்பு எடுத்த , தோல் அகற்றிய சிக்கன்
ப்ராய்லர் ேகாழி
கொழுப்பு நீக்கிய மாமிசம்,
ஹார்மோன் கொடுத்து வளர்க்கபட்ட கோழி/மிருகங்கள், பண்ணை மீன்
கெமிக்கல், பிரசர்வட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகள்
பொறித்த உணவுகள்
பர்கர், பீட்ஸா, ஃபிங்கர் சிப்ஸ்
பிஸ்கட்ஸ்
காபி, சர்க்கரை , கெமிக்கல், பிரசர்ேவடிவ் உள்ள எதுவும் தவிர்க்கபட வேண்டும்
ரொட்டி(bread) , Bun
காம்ப்ளான், ஹார்லிக்ஸ்,மற்ற சத்து பானங்கள்
மீல்ேமக்கர்,டோஃபு்,சோயா பொருட்கள்
சிப்ஸ் வகைகள்,குர்குரே போன்றவை
மது வகைகள்