ஜோதிடம் ஆன்மீகமா?

 முந்தைய பதிவு ஜோதிடம் விஞ்ஞானமா?   படிச்சுட்டீங்கல்ல.தொடருங்க.


விஞ்ஞானத்தில வெளஞ்ச கம்ப்யூட்டரையே ஜோசிய பதிவெழுதவும் அதில் கட்டம் போட்டு ஜோசியம் பாக்கவும் உபயோகிக்கிறதால ஜோசியத்தில் அறிவியல் இல்லாட்டியும் இன்னிக்கு ஜோசியர்கள் அறிவியலை யூஸ் பண்ணித்தான் அறியாமையை பரப்புறாங்க. பலன்களை எதுக்கும் ஒருமுறை கூகிளை கேட்டுட்டுதான் சொல்கிறார்கள். தொலைஞ்சு போன சைக்கிளை கூட மை போட்டு தேடுறவுங்களும் வெற்றிலையாக கூகிள் எர்த் தான் யூஸ் பண்றாங்களாம்.

சில ஜோதிடர்கள் செய்யும் தவறால் சோதிடம் பொய்யென்று அர்த்தமில்லை. சோதிடத்தை முறையாக கற்றவர்களால் எதையும் துல்லியமாக கணிக்க முடியுமாமே?

சோசியக்க்கரன விட தங்க மணிங்க தான் நம்ப மனசுல இருக்கிறத நேக்கா தெரிஞ்சுக்கிறாங்க. அது தான் எப்புடீன்னு புரியல!
எதிர்காலத்த துல்லியமாக கணிக்க ஒருத்தருக்கு முடிஞ்சா அவர்தான் இன்னிக்கு ஒலகத்தில பவர் புல்லு . சரித்திரம் பூரா விஞ்ஞானிகளும், மாவீரர்களும் , மகான்களும் , மாமேதகளும் சர்வாதிகாரிகளும் தான் இருந்திருக்காங்க. சோசியக்காரன் ஒருத்தன் இருந்திருக்கானா?



இன்னிக்கு வரைக்கும் மழை வருமா வராதாண்ணு தெரிஞ்சுக்க டீவி பொட்டியத்தான் பார்க்கிறோம். அட்லீஸ்ட் வானிலை அறிவிப்பளரான யாராவது சோசியக்காரன் இருக்கானா?. அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிகொண்டும், நம்மகிட்ட ஜோசியம் பார்க்க வர்ரவன் பணம் தருவனா மாட்டானா?
என்ற சந்தேகத்திலேயே பலன் சொல்லி மனசை குடைசலில் விட்டிற்றாங்க இல்லையா?

ஜோசியக்காரங்களும் ஆஸ்பத்திரிக்கு போறாங்க, ஹார்ட் அட்டாக்கில போறாங்க, கடங்காரங்கிட்டே மாட்டிக்கிறாங்க. எல்லா சோசியரும் என்ன தான் மஹான் மாதிரி பில்டப் கொடுத்தாலும் எல்லாம் செட்டப் தான். சாதாரண மனுசப்பயபுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து அல்லாடுறாங்க.

ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?
யாரு சோசியக்காரனை தேடிப் போவான் ?தன்னம்பிக்க இழந்து வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி போனவன் தான் போவான். தன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் யாருன்னு ஜோசியனைக் கேட்பான். அவனுக்கென்ன தெரியும்? வேண்டாதவங்க தகடு வச்சதா சொல்வான். அரண்டவன் கண்ணுக்கு கண்டவனெல்லாம் பகை. ஏற்கனவே காப்பிப்பொடி கடன் தராததால பக்கத்து வீட்டுல கடுப்பு. இது வேற சேந்துச்சா அவன்தான் தகடு வச்ச எதிரின்னு தீர்மானம் பண்ணிக்குவான். இவனுக்கு தன்னம்பிக்கை குறைஞ்ச நிலையில் யார் எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்பி விடுவார்கள். இவங்கிட்ட " எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு" என்று சொன்னால் ஜோசியன் பிழைப்பு நல்லாவா இருக்கும்? பக்கத்து வீட்டுக்காரன் மேலயோ சனி யின் மேலோ பாரத்தை போட்டு அதற்கு பரிகாரம் செய்ய சொல்வார்கள். இந்த பரிகாரத்தில் தான் சூட்சுமமாய் பணம் கறந்துடறாங்க. இதுக்கு தெய்வத்தை துணைக்கு கூப்பிட்டு பக்கத்தில வச்சிக்கிடுவாங்க. ஏன்னா ஒருவேளை வந்தவங்க கஷ்டம் தானாவே தீர்ந்திட்டா பரிகாரத்தால் தோஷம் நீங்கியது. இல்லாவிட்டால் பரிகாரத்தை சாமி ஏத்துக்கலைன்னு கூலா கடவுள் பெயரில் பழியை போட்டு விட்டு ஜோசியர் சமர்த்தாக தப்பிக்கலாம்.

ஜோசியம் ஆன்மீகமல்ல. ஏன்னா கடவுளே விதி்யை அமைச்சு அதை மீறுகிற சக்தியை மனிதனுக்கு கொடுக்க முட்டாளா? பரிகாரம் செய்வதால் தான் கடவுள் மனமிரங்கி விதியை மாற்றித்தருகிறான்னு சொன்னா அப்ப்டி இந்த மனுசப்பயபுள்ள ஜோசியம் பார்த்து பரிகாரம் தேடிக்கொள்வான் என முன்பே தெரிந்து பொய்யா ஏன் அப்படி ஒரு முட்டாள் தனமான விதியை கடவுள் அமைக்கிறான். இறைவனால் பரிகாரம் கிடைக்கும் என ஏன் சோசியன் முதல்லையே கண்டுபிடிக்கலே. எப்படியானாலும் ஜோதிடம் இறைவனை கொச்சைப் படுத்தத்தான் செய்யுது. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு

சில வேளை ஜோதிடத்தில் சரியாக பலன் சொல்லப்படுகிறதே?
சிலவேளை என்ன பல வேளையும் பலன்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனா அது எப்போதும் செயிச்சா தான் விஞ்ஞானம்.
பொதுவா ஜோசியப் பலன்கள் எலாஸ்டிக் ஜட்டி போல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி யாருக்கும் போட்டுக்கலாம்.
எல்லாருகிட்டயும் கலகலப்பா பழகும் சுபாவம் அப்படீன்னு ஒரு இடத்தில இருந்தா பிரெண்சுங்க கம்மி தான் வேறோரு இடத்தில இருக்கும் . நமக்கு தேவைப்பட்டதை எடுத்துகொள்ள வசதியாக இருக்கும் படி நேரெதிர் பலன்களை சாமர்த்தியமாக வாக்கியத்தில் பொதிஞ்சு வைத்திருப்பங்க.
ஒரு கருத்து சரியாக இருந்தால் ஆகா ஜாதகத்தில் அப்படியே இருக்கிறதே!என்ற ஆச்சரியம் அதன் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அதனால் அடுத்துள்ள கருத்து தவறாப்போச்சுன்னா அது தமக்கானது இல்லை என்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் விட்டு விடுவோம்.
சோசியக்காரங்களுக்கு கொஞ்சம் சைக்காலஜியும் தெரியும் வர்ரவங்க முக பாவத்தை பார்த்தே,போட்டிருக்கிற சட்டை வந்திறங்குகின்ற வாகனம் எல்லாத்தையும் கணக்கிட்டு தான் பலன்களை அடுக்குவாங்க. பிடிச்ச விஷயத்தை பெரிசு படுத்தறதும், அதிகமாக நினைவில் வச்சுக்கிறதும் , சிலாகிப்பதும் தான் மனுச புத்தி. (பார்க்க : Forer effect)
உதாரணமாக என் ஜாதகத்தில் "பேரும் புகழும் பெறுவீர்கள் பெண்களால் அதிகம் விரும்பபடுவீர்கள் "என்று இருந்தது . எனக்கு திருப்தியாத்தான் இருந்துச்சு. என் தங்கமணி அதை படிக்கும் வரை அதில் எந்த பிரச்சனையும் எனக்கு முதலில் தெரியல. அப்புறம் வில்லங்கமாயிற்று. என் நிம்மதி போச்சு.
அப்புறம் எனக்கு கணிதத்துறையில் நாட்டமதிகமாம் .பலன் சொல்றான் .ஆனால் கணக்குன்னாலே எனக்கு அலர்ஜி.ஆனால் எனக்கு பிடித்த கணினியை தான் அது சொல்றதுன்னு தேத்திக்கிட்டேன்.
ஆனா பாட்டி ஜாதகத்துக்கு கல்யாண பலன் வந்த போது ப்பூ..பொழப்பு சிரிக்கிறது

அடுத்த பதிவு  கிரகங்கள் என்ன செய்யும்?  
ம் ..அதையும் என்னண்ணு கேப்போம்..

ஜோதிடம்: மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

 

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கமணி தான் நல்லா தெரிஞ்சிக்கிறாங்க


ஹா ஹா ஹா

அருமை நண்பரே!

செய்திகளூடே ஹாஸ்யமும் ...
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜோதிடம் ஒரு அலசல்... இப்படி தலைப்பு வெச்சிருக்கலாம்

அருமையான நடையில் தெளிவான விளக்கம்

நல்ல ஆப்புயா

உங்களுக்கு எழுத்துலே கண்டமிருக்காமுல்லே... பார்த்து ஆட்டோ வந்துடப்போகுது
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஜமால்,அபூ அஃப்ஸர்.
//ஜோதிடம் ஒரு அலசல்... இப்படி தலைப்பு வெச்சிருக்கலாம்//

நிறைய பேர் அலசியும் அழுக்கு போகலே.நியூமராலஜி படி தலைப்பு மாத்த சொல்றீங்களான்னு தெரியலே;-)
//உங்களுக்கு எழுத்துலே கண்டமிருக்காமுல்லே//
சான்சே இல்லை.ஏன்னா நான் எழுதறதில்ல ஒன்லி டைப்பிங் தான்.
//ஆட்டோ வந்துடப்போகுது//
அந்த காலத்துலேயே இருக்கீங்க இப்பெல்லாம் டாடா சுமோ தான்.
ஆனா நான் குருவி குருவி பறந்தா..