பூமி

நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து உணர்ந்த வினாடியே
அதை ஒரு இடத்தில் காண்கிறோம். அந்த இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூமி என விரிந்து கொண்டே செல்கிறது. இந்த பூமியை பற்றிய நம் கருதல்கள் என்ன?

3000 வருடங்களுக்கு முந்தய  மனிதர்கள் பூமி தட்டையானது எனத்தான் கருதினார்கள். அதன்பிறகே பூமி உருண்டை என்று கருத்தை உருட்டி திருத்தினர்
பூமி ஒரு சம உருண்டை கோளமல்ல. அதன் பூமத்தியரேகைப் பகுதியில் அளந்தால் 40,077கி.மீ வருகிறது ஆனால் துருவங்களை அளந்தால் 68 கிமீ குறைகிறது.

 பூமியின் உள்ளும் புறமும் பல அடுக்குகளை உடையது.நாம் கெட்டியான பூமி என்று கருதும் மண் மற்றும் பாறைகளால் ஆன  "crust" எனப்படும் வெளித்தோடு வெறும் 40 கிலோமீட்டர் ஆழம் வரை மட்டுமே இருக்கிறது அதற்கு கீழிருந்து 2900 கிலோ மீட்டர் ஆழம் வரை திட மற்றும் உருகிய நிலையில் உள்ள பாறை "Mantle" எனப்படும் பகுதியாக உள்ளது. அதற்கும்  கீழே உருகிய இரும்பு மற்றும் நிக்கல் குழம்பு மட்டுமே உள்ளது. இப்பகுதி பூமியின் "core" எனப்படும். இதன் வெப்பநிலை சுமார் 4000 முதல் 5000* C.

சுருக்கமாக பூமியை ஒரு தேங்காய்க்கு ஒப்பிடலாம்.வெளித்தோடு திடமாகவும் உள்ளே திரவ நிலையில் உருகிய இரும்பும் இருக்கிறது. பூமி சுழலும் போது இரண்டும் வேறு வேறு வேகத்தில் சுழல்கிறது.

பூமியின் வெளிப்புறமாக சூழ்ந்துள்ள காற்று மண்டலமும் பல அடுக்குகளைக் கொண்டது.அதுவும் பூமியோடு கட்டுண்டே இருக்கிறது.பூமியே சூரிய மண்டலத்தின் ஒரு அடுக்கு தான்

புவியோட்டின் வெளிப்புறமாக மேல்.கீழ் பக்கவாட்டு பகுதிகளில் நாம் கால்கள் பூமியை நோக்கியும் தலை வெளிப்புறம் நோக்கியும் நடக்கிறோம்.ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் நாம் பூமியுடன் எப்போதும் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அதனால் நாம் பூமியிலிருந்து உதிர்ந்து விடுவதில்லை

புவியீர்ப்பு விசை வேறு,  புவிக்காந்த விசை வேறு. புவி ஈர்ப்பு விசை பூமியின் பொருண்மை (Mass) சார்ந்தது. இது பூமியின் உள்நோக்கி இழுக்கும் ஈர்ப்பு. புவிக்காந்த விசை உண்டாக காரணம் பூமியின் உருகிய இரும்பு உள்ளகத்தில் செறிந்துள்ள காந்த ஆற்றல். புவிக்காந்தத்துக்கு வடக்கு தெற்கு காந்தப் புலம் உண்டு. ஒரு காந்தம் காட்டும் புலத்திற்கும் புவிகாந்த புலத்திற்கும் பூமியின் சுழற்சி காரணம் சிறிய வித்தியாசம் உண்டு.

பூமி தோன்றி 4.8 பில்லியன் வருடங்கள் இருக்கலாமாம். இவ்வளவு காலத்திலும் பூமி பலவேறு மாற்றங்களை சந்தித்தே இன்று இந்நிலையில் இருக்கிறது.


பூமியின் வெளிப்புற ஒடாகிய கிரஸ்ட் என்பது பல துண்டுகளால் ஆனது.ஒரு foot ball ன் ஒட்டு பீஸ் போல பல துன்டுகளில் பல கண்டங்கள் பிரிந்து கிடக்கிறது. காலப்போக்கில்  இந்த கண்டங்கள் நகர்ந்தும் விலகியும் ஒன்றுடன் ஒன்று இடித்து மிதித்துக்கொள்ளவும் செய்கிறது.

அதனால் தான் சுனாமி ,நில நடுக்கம் ,மலைகள் ,பள்ளத்தாக்குகள் உருவாகின்றன.. காலம் நம் MAP களில் கண்டங்களை தன் விரல்களால் நகர்த்தி விளையாடுகிறது.


காற்று மண்டலத்தின் பெரும்பகுதி நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் மிக சிறிய அளவு கார்பன்டை ஆக்ஸைடும் இன்ன பிற வாயுக்களும் உள்ளன.
சூரிய வெப்பத்தை உள்வாங்கி சீராக பூமியில் பரப்பி பூமியை கதகதப்பாக வைத்திருப்பதும் இந்த காற்று மண்டலம் தான்.சூரியனின் புற ஊதாக்கதிர்களையும் விண்வெளியிலிருந்து பூமியில் வந்து மோதும் விண்கற்களயும் தடுத்து பூமியை பாதுகாப்பதும் இந்த காற்று கவசம் தான்.

பூமி செங்குத்து திசையிலிருந்து 23.4* பாகை சாய்ந்த கோணத்திலேயே சுழல்கிறது
பூமி 23 மணி 56 நிமிடத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுகிறது.365.26 நாட்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுகிறது.
பூமி சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றுவதால் ஜூலை மாதத்திலிருப்பதை விட ஜனவரியில் 5 மில்லியன் கிலோ மீட்டர் சூரியனுக்கு அருகே நெருங்குகிறது.
பூமி சூரியனை சுற்றும் வேகம் மணிக்கு 100,000 கிலோ மீட்டர்.

 இனி மண்டை காயவக்கும் கேள்விகள். 
பூமியின் மேற்பரப்பு 72% நீரால் ஆனது.நமது உடலும் அதே சதவீதம் நீரால் தான் ஆனது. பூமியோட்டின் பரப்பில் தான் பெரும்பாலான தனிமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அறியப்படுக்கிறது.  மனித உடலும் பூமியின் மூலகங்களால் ஆனது தான்.
பூமியில் மட்டும் தான் இதுவரை உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் மட்டுமே உயிர் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சமும் இருக்கின்றன. இதன் பொருள் பூமியில் உள்ள உயிரினங்களை மட்டும் தான் நம்மால் அடையாளம் காணமுடிகிறதா?

பூமியில் காற்று இல்லாவிட்டால் அதில் ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் நீர் இல்லாவிட்டால்? தாவரங்கள் இல்லாவிட்டால்? .....நம் நிலை என்னன? நம் இருப்புக்கு எத்தனை படிக்கட்டுகள் நேர்த்தியாக பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது ஏன்?
பிரபஞ்சத்தில் காலக்சிகளின் இருப்பும் கோளத்தின் வெளிப்பரப்பில் தான்.பூமியில் உயிர்களின் இருப்பும் அதன் வெளிப்பரப்பில் தான்.இதற்கு பொதுவான தொடர்பு உண்டா?
வெடித்து சிதறிய நெபுலாவின் நெருப்புச் சாம்பலான பூமியில் தண்ணீரும் உயிர்களும் தோன்றியது எப்படி?
பூமியின் ஆரம்ப காலத்தில் உயிர்வாழ தகுதியற்றதாக மீத்தேனும் அம்மோனியாவும் நைட்ரஜனுமே நிறைந்து விஷமாக இருந்த காற்றில் பிராணவாயு நிறைந்தது எப்படி?
இந்த ஒன்றுக்குள் ஒன்றான அடுக்குகளும்,கோளங்களும் ,சுழற்சிகளும், ஈர்ப்புகளும், பயணமும் எல்லாம் ஏன் ? எதை நோக்கி? இதன் அடிப்படையான சூட்சுமம் என்ன?
அடிப்படையில் ஏதோ ஒன்றின் இடையறாத சுழற்சி,அதன் அலைகள் பிரதிபலிப்புகள் இவைகளைதான் எல்லாவிதமாகவும் கருதிக் கொண்டிருக்கிறோமோ?
இந்த வடிவங்கள் தோற்றங்கள் அளவீடுகள் எல்லாம் நம் கருத்துக்கு அப்பாலும் இருக்கிறதா?
இந்த மகா மகா பிரபஞ்சத்தில் பூமி மட்டும் எப்படி உயிர்களுடன் இருக்கிறது?
 நம்மை சுற்றியே எல்லாம் இருப்பதாக உணரும் நாம் ஏன் எல்லாவற்றுக்கும் நடு நாயகமாக இல்லாமல் ஏதோ ஒரு காலக்சியில் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் மூன்றாவதாக ஒரு கோளில் எதோ ஒரு மூலையில் ஒரு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து இதையெல்லாம் யோசிக்கிறோம்.ஏன்?

more about earth:
 

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிந்திக்க வேண்டிய... வைத்த கேள்விகள்...
Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
my thoughts also agree with u